சினிமா செய்திகள்
சூரரைப் போற்று படக்குழுவினர் இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதுதான்!
சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் ரிலீஸ்க்கு தயாராக உள்ள திரைப்படம் சூரரைப் போற்று.
கோரோனா ஊரடங்கு காரணங்களால், திரையரங்குகளில் படங்கள் ஏதும் வெளியாகாமல் உள்ளன. எனவே சூர்யாவின் சூரரைப் போற்று, விஜயின் மாஸ்டர் உள்ளிட்ட முக்கிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஆகியுள்ளது.
திரையரங்குகள் எப்போது திறக்கும் என்று கணிக்க முடியாமல் உள்ள நிலையில், சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைம், நெட்பிளிஸ் போன்ற ஆன்லைன் தளங்களிலும் வெளியாகாது என்று திரைப்படக் குழுவினர் தெரிவித்து இருந்தனர்.
இன்று மாலை சூரரைப் போற்று திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டு இருந்தது. எனவே டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சூரரைப் போற்று ஆஷ்டேக் டிரெண்ட் ஆகி வந்தது. ஒருவேலை சூரரைப் போற்று திரைப்படம் ஆன்னலைன் தளங்களில் வெளியாகலாம் என்று அறிவிப்பாக இருக்குமோ என்று ரசிகர்கள் பெரும் அளவில் எதிர்பார்த்தனர்.
ஆனால், சூரரைப் போற்று திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘காட்டுப் பயலே’ பாடலின் ஒரு நிமிட வீடியோ ஜூலை 23-ம் தேதி காலை 10 மணியளவில் வெளியாகும் என்று அறிவித்தது, ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சூரரைப் போற்று பட பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்திய நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் பாடல் காட்சிகளை பார்க்க ரசிகர்கள் விருப்பம் கொண்டு இருந்தாலும், படம் எப்போது வெளியாகும் என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
1 Min video of #KaattuPayale awaits you on 23rd July @ 10AM!
Sung by #dhee#SooraraiPottru#KaatukaKanule #AakasamNeeHaddhuRa@Suriya_offl #SudhaKongara @rajsekarpandian @nikethbommi @Aparnabala2 @deepakbhojraj @PoornimaRamasw1 @gopiprasannaa pic.twitter.com/QoroDifv5Z— G.V.Prakash Kumar (@gvprakash) July 19, 2020