இந்தியா

புதிய நாடாளுமன்ற கட்டிட பணி தொடர உச்சநீதிமன்றம் அனுமதி

Published

on

டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிட பணிகளை தொடர்ந்து நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மத்திய அரசு புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கான கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. பிரதமர் மோடி டிசம்பர் 10 அன்று இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.இந்த புதிய வளாகத்தின் மதிப்பு சுமார் 971 கோடி ஆகும். 2020 ஆம் ஆண்டிற்குப்பிறகு இந்தகட்டிடம் பயன்பட்டிற்கு வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சுற்றுசூழல் நலனை கருத்தில் கொண்டு இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது.நீதிபதி கான்வில்கர் தலைமையிலனா அமர்வு நீதிமன்றம் வழக்கை கடந்த நவம்பர்  5ஆம் தேதி அன்று ஒத்திவைத்தது. தற்போது வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி கான்வில்கர் தலைமையிலனா அமர்வு நீதிமன்றம், புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் சுற்றுசூழலுக்கு எந்தவித பதிப்பும் ஏற்படுத்தாத வகையில் கட்டிடப்பணிகள் நடக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கி உள்ளது

seithichurul

Trending

Exit mobile version