தமிழ்நாடு

ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்ட விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது: உச்சநீதிமன்றம்

Published

on

ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்ட விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆவின்பால் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் முன்னரே ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய வேண்டும் என்றும் தமிழக காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வந்தது. 20 நாட்கள் தேடலுக்குப் பின்னர் பெங்களூரில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார் என்பதும் அதன் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ராஜேந்திரபாலாஜி எதிரான வழக்கில் உள்ள அரசியல் குறித்து எங்களுக்கு கவலை இல்லை என்றும், ஆனால் அவர் கைது செய்யப்பட்ட விதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு குறித்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version