இந்தியா

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடையா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Published

on

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ரேக்ளா பந்தயங்களை அனுமதிக்க கோரிய மஹாராஷ்டிரா அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான இடைக்கால உத்தரவு குறித்த தகவலையும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்யக்கோரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதும் இதனை அடுத்து சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தியதை அடுத்து அப்போதைய முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் டெல்லி சென்று ஜல்லிக்கட்டு மீதான தடைக்கு விதிவிலக்கு பெற்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்பின் கடந்த சில ஆண்டுகளாக எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ரேக்ளா பந்தயத்தை அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் அம்மாநில அரசு மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றபோது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கும் இடைக்கால தடை உத்தர்வு பிறப்பிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் இது குறித்து கருத்துக் கூறுகையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க போவதில்லை என்றும் ரேக்ளா பந்தயங்களை அனுமதிக்க கோரி மகாராஷ்டிரா அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மட்டும் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது.

முன்னதாக மகாராஷ்டிராவில் நடைபெறும் ரேக்ளா பந்தயத்தோடு தமிழகத்தின் ஜல்லிக்கட்டை ஒப்பிட முடியாது என்றும் தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு கலந்த பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version