இந்தியா

நீட் தேர்வு ஒத்திவைப்பா? உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேசிய தேர்வு முகமை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீட் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் அனைத்தையும் இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீட்தேர்வு ஒத்தி வைக்கக் கூடிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை செப்டம்பர் 12ஆம் தேதி நடத்த கூடாது என்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்றும் மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பிலிருந்து பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே நாளில் விசாரிக்கப்படும் என்று ஏற்கனவே தகவல் வெளியாகின. இந்த நிலையில் இன்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.

இன்றைய விசாரணையின்போது நீட்தேர்வை ஒத்தி வைக்கக் கோரிய மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதால் திட்டமிட்டபடி வரும் 12ஆம் தேதி தமிழகம் உள்பட நாடு முழுவதும் நீட் தேர்வு நடக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது என்பதும் இருப்பினும் இந்த ஆண்டு கண்டிப்பாக தமிழக மாணவர்களும் நீட் தேர்வு எழுதிய ஆக வேண்டும் என்ற கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version