தமிழ்நாடு

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டுக்கு தடையா: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published

on

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாமகவினர் கடந்த அதிமுக ஆட்சியின் கடைசி கட்டத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். பேருந்துகள் ரயில்கள் மறியல் செய்யப்பட்டதாகவும் இதில் வன்முறை நிகழ்ந்ததாகவும் கூட்டப்பட்டது.

இதனை அடுத்து அ.தி.மு.க அரசின் கீழ் நடந்த கடைசி சட்டமன்றக் கூட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், 10.5 சதவிகதத்தை வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்து சட்டம் நிறைவேற்றப்பட்டது என்பது தெரிந்ததே. மேலும் இந்த சட்டத்திற்கு தமிழக ஆளுனர் பன்வாரி புரோஹித் ஒப்புதல் அளித்தார் என்பதால் 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவான வழக்கில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதற்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் சற்றுமுன் அறிவித்துள்ளது உள் ஒதுக்கீடு சட்டத்தை தாங்கள் படித்துப் பார்த்ததாகவும் அதற்கு தடை விதிக்க போவதில்லை என்றும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர். மேலும் ஏற்கனவே நிலுவையில் உள்ள இட ஒதுக்கீடு வழக்குகளுடன் சேர்த்து வன்னிய இட ஒதுக்கீடு வழக்கு விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version