இந்தியா

அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு..!

Published

on

அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து பங்கு வர்த்தகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதானி குழும நிறுவனங்களுக்கு எதிராக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை காரணமாக கடந்த சில வாரங்களாக பங்குச்சந்தை கடும் சர்வில் இருக்கும் நிலையில் இது குறித்து விசாரிக்குமாறு செபிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும் விசாரணை முடிவுகளை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவையும் அமைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம் இந்திய பங்குச்சந்தை மட்டும் இன்றி சர்வதேச முதலீட்டாளர்களையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விசாரணை செய்ய சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இன்னும் இரண்டு மாதத்தில் அதானி குழும நிறுவனங்களின் நிலைமையை விசாரித்து முடிவுகள் வெளியிட வேண்டும் என்றும் இந்த விசாரணையை உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு முதலீட்டாளர்களும் உற்று நோக்குவார்கள் என்பதால் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்றும் செபிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பெற்றுள்ளது.

மேலும் செபிக்கு 3 முக்கிய உத்தரவையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். முதலாவதாக பத்திர ஒப்பந்த ஒழுங்குமுறை விதிமுறைகளின் வரை சரியாக அமைந்துள்ளதா என செபி விசாரிக்க வேண்டும் என்றும் சட்டத்தின் படி செபிக்கு தொடர்புடைய தரப்பினர்களுடன் தொடர்புடைய கட்சிகளுடன் பரிவர்த்தனை மற்றும் பிற தகவல்களையும் வெளியிடுவதில் செபி தோல்வி அடைந்ததா என்பதை விளக்க வேண்டும் என்றும் ஏற்கனவே சட்டங்களுக்கு முரணாக பங்குகளின் விலை கையாளப்பட்டுள்ளதா என்பதை குறித்து செபி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து பிரிவுகளிலும் விசாரணை செய்ய செபிக்கு உரிமை உண்டு என்றும் விசாரணையை இரண்டு மாதங்களுக்கு முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய செபி சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை உணர்கிறோம் என்றும் பொதுமக்களின் பணம் கடுமையான அச்சுறுத்தலில் இருக்கிறது என்று தெரிய வந்துள்ளதால் செபி இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version