இந்தியா

ஆக்சிஜன் பற்றாக்குறை: இன்று இரவு வரை கெடு கொடுத்த சுப்ரீம் கோர்ட்!

Published

on

ஆக்சிஜன் பற்றாக்குறையை இன்று இரவுக்குள் சரி செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று டெல்லி என்பதும் அங்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்ப்பிடத்தக்கது. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையும் இருந்து வருவதால் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவே சில நோயாளிகள் உயிரிழந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் கொரனோ நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான ஆக்சிஜன் பற்றாக்குறையை இன்று இரவுக்குள் அல்லது அதற்கு முன்னர் சரி செய்ய வேண்டும் என்றும் இதனை உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் மத்திய அரசு மாநிலங்களுடன் ஒத்துழைத்து செயல்பட வேண்டும் மாறும் அறிவுறுத்தியுள்ளது.

அவசரகால ஆக்சிஜன் தொகுப்புகள் அடுத்த நான்கு நாட்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் மாநிலங்களுக்கு தற்போது உள்ள ஆக்சிஜன் உபயோகத்தை ஒதுக்குவதும், அன்றாட அடிப்படையில் ஒதுக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version