இந்தியா

இரண்டு நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடுங்க: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

Published

on

டெல்லியில் இரண்டு நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடுங்கள் என உச்சநீதிமன்ற நீதிபதி மத்திய அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அளவு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தீபாவளி அன்று அதிக அளவு பட்டாசு வெடித்ததன் காரணமாக டெல்லியில் மிக மோசமாக காற்று மாசுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று என்று சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை செய்யப்பட்டது. இந்த விசாரணையின் போது டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து உடனடியாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் டெல்லியில் தேவைப்பட்டால் இரண்டு நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் அனைத்து விவகாரங்களுக்கும் விவசாயிகளை குறை கூறுவது தற்போது வழக்கமாகிவிட்டது என்றும் கடந்த 7 நாட்களில் எவ்வளவு பட்டாசுகள் வெடிக்க பட்டது என்பதை கவனித்தீர்களா என்றும் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

Trending

Exit mobile version