இந்தியா

முதுநிலை நீட் தேர்வை நடத்த தடையா? சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு!

Published

on

முதுநிலை நீட் தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேர்வை நடத்த தடை இல்லை என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என இந்திய மருத்துவர்கள் சங்கம் தேசிய தேர்வு முகமைக்கு கோரிக்கை விடுத்தது. இது குறித்து கடிதம் எழுதி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தேசிய தேர்வு முகமை திட்டமிட்டபடி மே 21-ம் தேதி முதல் நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றும் கூறியிருந்தது. இந்த நிலையில் திடீரென ஜூன் 9ஆம் தேதிக்கு முதுநிலை நீட்தேர்வு மாற்றப்பட்டதாக வதந்தி பரவியதையடுத்து தேசிய தேர்வு நிலைமை இதற்கு விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் முதுநிலை நீட் தேர்வை ஒத்தி வைக்கக் கோரிய மனுவை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது .

திட்டமிட்டபடியே 21ஆம் தேதி முதல் நிலை நீட் தேர்வை நடத்த எந்தவித தடையுமில்லை என சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு செய்துள்ளது. இதனை அடுத்து வரும் 21ஆம் தேதி முதுநிலை நீட் தேர்வு நடைபெறும் என்பது உறுதியாகி உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version