இந்தியா

கூடுதல் மதிப்பெண்களுக்கான சி.பி.எஸ்.இ தேர்வு: சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு!

Published

on

கூடுதல் மதிப்பெண்களுக்காக சிபிஎஸ்இ மாணவர்கள் எழுதும் தேர்வு குறித்து உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிபிஎஸ்சி பிளஸ் டூ மாணவர்கள் பொதுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களில் திருப்தி இல்லை என்றால் கூடுதல் மதிப்பெண்களுக்காக மீண்டும் தேர்வு எழுதும் முறை நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கூடுதல் மதிப்பெண்களுக்காக எழுதப்பட்ட தேர்வில் உள்ள மதிப்பெண் அடிப்படையில் தான் தேர்ச்சி முறை என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கான்வில்கர் மற்றும் சிடி ரவிக்குமார் ஆகியோர் பொதுத்தேர்வு மற்றும் கூடுதல் மதிப்பெண்களுக்காக எழுதப்பட்ட தேர்வு ஆகிய இரு தேர்வுகளில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் மாணவர்கள் பெற்றுள்ளார்களோ, அந்த தேர்வின் மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தான் தேர்ச்சி என்ற விதிமுறையை சிபிஎஸ்இ நிர்வாகம் நீக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவு காரணமாக கூடுதல் மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதும் மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version