இந்தியா

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!

Published

on

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெகாசஸ் என்ற செயலியின் மூலம் இந்தியாவில் உள்ள முன்னணி அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் மொபைல் போன்கள் ஒட்டுக் எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த முக்கிய உத்தரவு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு விதித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் உண்மை தன்மையை கண்டறிய வல்லுநர் குழுவை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு உள்ளது. இந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் விரைவில் உறுதி செய்யப்படுவார்கள் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்து வல்லுநர் குழு அமைக்க வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் ராம் உள்பட ஒருசிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டு கேட்டதாக எந்த விதமான ஆதாரமும் இல்லை என்றும், பெகாசஸ் ஸ்பைவேர் பயன்படுத்தி சில நபர்களின் தொலைபேசிகள் வேவு பார்க்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகளில் உண்மை தன்மை இல்லை என்றும் மத்திய அரசு தன்னுடைய வாதத்தை சுப்ரீம் கோர்ட்டு முன்வைத்தது.

மேலும் பெகாசஸ் என்ற செயலியை அரசாங்கம் பயன்படுத்துகிறதா? இல்லையா என்ற தகவலை பொதுவெளியில் வெளியிட முடியாது என்றும் அது பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தகுதி வாய்ந்த வல்லுனர்கள் அடங்கிய குழு அமைத்து இந்த பிரச்சினைகள் உள்ள உண்மைத் தன்மையை கண்டறிவோம் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்த வழக்கினை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரமணா அவர்கள் தலைமையிலான அமர்வு பெகாசஸ் ஒட்டுக்கேட்டு விவகாரத்தில் உண்மைத்தன்மை கண்டறிய இந்த வாரமே வல்லுனர்கள் குழு அமைக்கப்படும் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version