இந்தியா

கொரோனா கிடுகிடு உயர்வு: உச்ச நீதிமன்றத்துக்கு வந்த சோதனை!!!

Published

on

இந்திய அளவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் உச்ச நீதிமன்ற ஊழியர்களில் சுமார் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், இதன் காரணமாக சீக்கிரமே நீதிமன்றம் இழுத்து மூடப்படும் என்று தகவல் வந்துள்ளது. முன்னதாக கொரோனா தொற்று அதிகரித்த போது, சென்ற ஆண்டில் உச்ச நீதிமன்றம் இழுத்து மூடப்பட்டு, காணொளி காட்சி மூலம் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அதே செயல்பாட்டை நீதிமன்ற நிர்வாகம் செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Supreme Court Judgement On Crackers Ban Case

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 1,68,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் 904 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 10,774 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இவ்வாறாக அன்றாட கொரோனா தொற்று பரவல் திகைக்கவைக்கும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற ஊழியர்கள் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், உச்ச நீதிமன்ற வளாகம், அறைகள் முழுவதுமே கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.

Trending

Exit mobile version