இந்தியா

இந்திய வரலாற்றில் முதல் முறையாகப் பொங்கலுக்கு உச்ச நீதிமன்றம் விடுமுறை!

Published

on

இந்திய உச்ச நீதிமன்றங்கள் வரலாற்றில் முதல் முறையாக, பொங்கல் பண்டிகைக்கு நீதிமன்றம் இரண்டு நாட்கள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டுக்கான உச்ச நீதிமன்றம் விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் முதல் முறையாகத் தமிழர் திருநாளான பொங்கல் மற்றும் சங்கராந்திக்காக விடுமுறை சேர்க்கப்பட்டுள்ளது.

எனவே வர இருக்கும் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம், 14 மற்றும் 15-ம் தேதிகள் பொங்கல் தினத்தன்று உச்ச நீதிமன்றம் இயங்காது. இதற்கு முன்னதாக பொங்கலுக்கு உச்ச நீதிமன்றத்திற்கு விதிமுறை வழங்கப்படாது.

உச்ச நீதிமன்றத்தில் 30 நீதிபதிகள் அமர்வில் உள்ளனர். இவர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் பொங்கல், சங்கராந்தியைக் கொண்டாடும் தென் மாநிலத்தவர்களும் உள்ளதால் இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது,

seithichurul

Trending

Exit mobile version