இந்தியா

தீபாவளி பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் போட்ட நிபந்தனை.!

Published

on

தீபாவளி என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது பட்டாசு தான். நம் கொண்டாட்டத்திற்கு வெடி வைக்கும் வகையில் சிலர் இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த ஆண்டு டெல்லியில் மாசு கட்டுப்பாட்டை அமல்படுத்த பட்டாசு வெடிக்கத் தடை விதித்ததைத் தொடர்ந்து இந்த ஆண்டு நாடு முழுவதும் தடை விதிக்க முறையிடப்பட்டது.

இந்த வழக்கிற்கு இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் பட்டாசு விற்பனையை அனுமதித்து உள்ளது.

உச்சநீதிமன்றத்தின் நிபந்தனைகள்:

– மாசு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

– தடை செய்யப்பட்ட ரசாயனம் பயன்படுத்தக் கூடாது

– காலை 8 மணி முதல் இரவு 10 வரை மட்டுமே தீபாவளியன்று பட்டாசு வெடிக்க வேண்டும்

– உரிமம் இருப்பவர்கள் மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டும்

– இணையத்தளம் மூலம் பட்டாசு விற்பனை செய்யக் கூடாது

– குறைந்த புகை வெளியிடும் பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்

உச்ச நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள் வயிற்றில் பாலை வார்த்தது. விதிகளைச் சிறப்பாகப் பின்பற்றிப் பாதுகாப்பான தீபாவளியை அனைவரும் கொண்டாடுங்கள்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version