இந்தியா

பணமதிப்பிழப்பு நடவடிக்கை: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published

on

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அதன்படி அப்போது புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட அதோடு புதிதாக 500 ரூபாய் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக நாட்டில் உள்ள ஏராளமானோர் பாதிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக இந்திய பொருளாதாரம் சிதைந்தது என்றும் பலர் கூறிவந்தனர். ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என மத்திய அரசு மறுத்து வந்தது.

இந்த நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக விசாரணை செய்யப்பட்டு வந்தது. மொத்தம் 58 மனுக்கள் பண மதிப்பிழப்பை எதிர்த்து தொடரப்பட்ட நிலையில் அனைத்து மனுக்களும் ஒன்றாக இணைத்து விசாரிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் தீர்ப்பை வழங்கியுள்ளது.

5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த இந்த தீர்ப்பில் மத்திய அரசு எடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி தரப்பில் வரி ஏய்ப்பை தடுப்பது உள்ளிட்ட பல நன்மைகளை கருத்தில் கொண்டு விரிவான ஆலோசனைக்கு பின்னர் தான் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அதை ரத்து செய்யக்கூடாது என்றும் மத்திய அரசு வாதிட்டது.

சுப்ரீம் கோர்ட் இதனை ஏற்றுக் கொண்டு மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் எந்தவித தவறும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசு, பணமதிப்பிழப்பு, சுப்ரீம் கோர்ட்,

seithichurul

Trending

Exit mobile version