தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்!

Published

on

ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தினங்களில் இரு கட்டமாக நடைபெற உள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகள் இன்னும் முடியவில்லை என்றும் எனவே அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணி முடிவடைந்து விடும் என்றும் எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு நான்கு மாத காலம் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் சொல்லும் காரணம் மிகவும் மோசமாக உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே உச்சநீதிமன்றத்தின் இந்த கால அவகாச உத்தரவை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version