இந்தியா

‘கோர்ட்டு டைமயா வேஸ்ட் பண்றீங்க…’- உ.பி அரசுக்கு ரூ.15,000 அபராதம் போட்ட உச்ச நீதிமன்றம்

Published

on

உத்தர பிரதேச மாநில அரசு, தாங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றில் 500 நாட்களைக் கடந்த பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதால், உஷ்ணமடைந்த நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு அபராதம் விதித்துள்ளது. 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, உத்தர பிரதேச அரசைக் கடுமையாக சாடியுள்ளது நீதிமன்றம்.

உத்தர பிரதேச அரசில் பணிபுரிந்த ஒருவருக்கு எதிராக, கடந்த 2018 ஜனவரியில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அம்மாநில அரசு வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கை அந்த ஆண்டு அக்டோபர் மாதம் தள்ளுபடி செய்த நீதிமன்றம், சம்பந்தபட்ட நபருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்துதான் உத்தர பிரதேச அரசு 576 நாட்களுக்குப் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கானது உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான நீதிமன்ற அமர்வுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், ‘ஒரு வழக்கில் எப்போது மேல் முறையீடு செய்ய வேண்டும் என்கிற அடிப்படை புரிதல் இல்லாமல் இது கையாளப்பட்டுள்ளது. தாமதத்தைக் காரணம் காட்டி இந்த வழக்கை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம். மேலும் நீதிமன்ற நேரத்தை வீண்டித்த இந்த தாமதத்திற்குக் காரணமான மனுதாரருக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம்’ என்று தெரிவித்தது.

இந்த மேல்முறையீடு தாமதத்திற்குக் காரணமான உத்தர பிரதேச அரசு அதிகாரிகளிடமிருந்து அபராதத் தொகை வசூலிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version