தமிழ்நாடு

உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா கௌரி: வழக்கு தள்ளுபடி!

Published

on

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட உள்ள புதிய நீதிபதிகளின் பட்டியல் வெளியான உடனே அதில் ஒரு நீதிபதியாக இடம்பெற்ற விக்டோரியா கௌரிக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் சற்று முன் அவர் கூடுதல் நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். மேலும் அவருக்கு எதிரான மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

#image_title

விக்டோரியா கௌரியின் பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் திரும்ப பெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சில எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இது தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் மற்றும் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பப்பட்டது. மேலும் விக்டோரியா கௌரி நியமனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தநிலையில் விக்டோரியா கௌரி சற்று முன் திட்டமிட்டபடி சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். அவர் பதவியேற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில் அவரது நியமனத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்தது. இந்த வழக்கு வந்த சற்று நேரத்தில் வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டு, அந்த அமர்வில் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் விக்டோரியா கௌரி நீதிபதியாக தொடர எந்த தடையும் இல்லை.

author avatar
seithichurul

Trending

Exit mobile version