இந்தியா

அனைத்து தீர்ப்பாயங்களையும் மூடிவிடுங்கள்: மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி காட்டம்

Published

on

அனைத்து தீர்ப்பாயங்களையும் மூடி விடுங்கள் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில வருடங்களாகவே சுப்ரீம் கோர்ட்டு உள்பட நீதிமன்றங்களின் தீர்ப்புகளை மத்திய அரசு மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்புகளுக்கும் உத்தரவுகளுக்கும் மத்திய அரசு மதிப்பு அளிப்பதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களில் உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்து ஏற்கனவே உத்தரவிட்டும் அது குறித்து எந்தவித நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மத்திய அரசு தங்களது பொறுமையை சோதித்து பார்ப்பதாகவும் தீர்ப்பாயங்களை நடத்த விருப்பம் இல்லை என்றால் அனைத்து தீர்ப்பாயங்களையும் மூடி விடுங்கள் என்றும் மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி ரமணா அவர்கள் காட்டமாக கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் மத்திய அரசு இனிமேலாவது நீதிமன்றங்களை தீர்ப்புகளை மதித்து நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version