இந்தியா

ஒரு ஆண்டாக போராட்டமா? டெல்லி விவசாயிகளுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்!

Published

on

ஒரு ஆண்டாக போராட்டம் செய்து தேசிய நெடுஞ்சாலையை முடக்குவது சரியானதா? என டெல்லியில் போராட்டம் செய்து வரும் விவசாயிகளை நோக்கி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாக்கல் செய்த புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். இந்த போராட்டம் கிட்டத்தட்ட ஓராண்டை நெருங்கி வரும் நிலையில் கடந்த ஒரு ஆண்டாக ஒருசில தேசிய நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டெல்லி – உத்திரப்பிரதேசம் மற்றும் டெல்லி – அரியானா தேசிய நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டு உள்ளதால் இந்த சாலை வழியாக சென்று வரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சோனியா அகர்வால் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் விவசாயிகள் போராட்டம் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் சாலை மறியல் போராட்டத்தால் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர் என்றும் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண பல வழிமுறைகள் இருக்கும்போது தொடர்ச்சியாக போராட்டம் செய்வதன் மூலம் என்ன பலனை காணப் போகிறார்கள்? என்றும், நாடாளுமன்ற விவாதங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலமாக பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்றும், போராட்டம் என்ற பெயரில் ஒரு ஆண்டாக தேசிய நெடுஞ்சாலைகளை முடக்கி வைப்பது சரி அல்ல இந்தப் போராட்டம் எப்போது முடிவுக்கு வரும்? என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version