தமிழ்நாடு

சக்கரவர்த்திகள் போல் நீதிபதிகள் செயல்படக் கூடாது: உச்சநீதிமன்றம் கண்டனம்

Published

on

சக்கரவர்த்திகள் போல் நீதிபதிகள் செயல்படக் கூடாது என்று உச்சநீதிமன்ற அமர்வு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஒரு வழக்கில் தேவையில்லாமல் அரசு அதிகாரிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சம்மன் அனுப்பக் கூடாது என்றும், நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசு அதிகாரிகளுக்கு நெருக்குதல் தரும் வகையில் அரசு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பக் கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டுள்ளது

வழக்கு ஒன்றில் உத்திரப்பிரதேச மாநில மருத்துவ செயலாளரை ஆஜராகுமாறு அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உபி மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் தான் நீதிபதிகள் சக்கரவர்த்தி போல் நடந்துகொள்ளக் கூடாது என உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version