இந்தியா

பெகாசஸ் விவகாரம்: விசாரணைக் குழுவுக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்!

Published

on

கடந்த சில மாதங்களுக்கு முன் பெகாசஸ் விவகாரம் விசுவரூபம் எடுத்தது என்பதும் இதனை அடுத்து இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் தற்போது உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சி பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்களை ஒட்டுக்கேட்க பெகாசஸ் என்ற செயலி பயன்படுத்தப்பட்டது என்று குற்றச்சாட்டு எழுந்தது. மத்திய அரசு எதிர்க்கட்சி பிரபலங்களை உளவு பார்ப்பதற்காக பெகாசஸ் செயலி நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்த வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்ய சுப்ரீம் கோர்ட்டு குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு தற்போது விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய முன்னாள் நீதிபதி மதன் லோகூர் என்பவர் தலைமையில் மேற்குவங்க மாநில அரசு தனியாக ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. இந்த விசாரணை குழுவுக்கு உச்ச நீதிமன்றம் தற்போது தடை விதித்துள்ளது.

ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் அமைத்த குழு விசாரணை செய்து கொண்டிருக்கும் நிலையில் மேற்கு வங்க மாநிலம் அமைத்த விசாரணைக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version