தமிழ்நாடு

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்பு: 50% இடஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

Published

on

தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 50 சதவீத இட ஒதுக்கீடு குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பில் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு தற்காலிகமாக வழங்கவும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் கலந்தாய்வு நடத்தி கொள்ளவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதை அடுத்து அரசு மருத்துவர்கள் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தமிழ்நாடு அரசின் அரசாணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பால் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் பயன் பெறுவார்கள் என்பதால் அரசு மருத்துவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

seithichurul

Trending

Exit mobile version