இந்தியா

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி! ஆனாலும் ஒரு சிக்கல்

Published

on

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது என சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவுக்கு பதில் அளித்த மத்திய அரசு ஆக்ஸிஜனை தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கலாம் என தெரிவித்திருந்தது.

இதுகுறித்து சமீபத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூடிய தமிழக அரசும் தூத்துக்குடியில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்கலாம் என பிரமாண பத்திரத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. ஆனால் அதே நேரத்தில் தூத்துக்குடியில் தயாராகும் ஆக்ஸிஜனுக்கு தமிழகத்திற்கே முன்னுரிமை தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் தமிழகத்தின் இந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. தூத்துக்குடியில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் அனைத்தும் மத்திய அரசுக்கே வேண்டும் என்றும் மத்திய அரசுதான் தேவையான மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இந்த நிலையில் சற்று முன்னர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. மேலும் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கினாலும் அதில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் அனைத்தும் மத்திய அரசுக்கு செல்லும் என்றும் அதன் பின்னர் மத்திய அரசு தேவையான மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version