இந்தியா

பிச்சை எடுத்தாவது மக்களை காப்பாற்றுக்கள்: மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் காட்டம்

Published

on

பிச்சை எடுத்தாவது நாட்டு மக்களை காப்பாற்றுங்கள் என மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் கடும் காட்டமான பதில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3.15 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸிலிருந்து பொது மக்களை காப்பாற்றுவதில் மத்திய அரசு சுணக்கம் காட்டி வருவதாகவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்றில் மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் காட்டமான அறிவுறுத்தல் ஒன்று கூறியுள்ளது. பிச்சை எடுங்கள், திருடுங்கள், கடன் வாங்குங்கள், பணம் கொடுத்து வாங்குங்கள், எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் ஆனால் உயிருக்கு போராடும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுங்கள் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மத்திய அரசின் இந்த காட்டமான அறிவுறுத்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version