சினிமா

பாலய்யா கூப்பிட்டு போகாம இருக்க முடியுமா? என்டிஆர் நூற்றாண்டு விழாவில் மாஸ் காட்டிய ரஜினிகாந்த்!

Published

on

தெலுங்கு திரையுலகின் மாபெரும் நடிகரும் மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி. ராமாராவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என என்.டி.ஆர் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா விடுத்த அழைப்பை ஏற்று நேற்று நடிகர் ரஜினிகாந்த் விஜயவாடாவில் நடந்த பிரம்மாண்ட விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

விமான நிலையத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் இறங்கிய உடனே அவரை கட்டியணைத்து மரியாதை கலந்த அன்பு வரவேற்பை அளித்து விட்டார் பாலய்யா.

#image_title

300-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள என்.டி.ஆர். 3 முறை தேசிய விருதுகளைப் வென்றதோடு, தயாரிப்பாளராகவும் சினிமா இயக்குனராகவும் புகழ் பெற்று விளங்கினார். 1982-ல் தெலுங்கு தேசம் கட்சி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த என்.டி.ராமராவ்1983 முதல் 1989 வரையிலும் பின்னர் 1994 முதல் 1995 வரையிலும் ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முதலமைச்சராக பதவி வகித்தார்.

#image_title

விஜயவாடாவில் உள்ள பொரங்கி எனும் இடத்தில் நடைபெற்ற இந்த விழாவில் சந்திரபாபு நாயுடு, நந்தமுரி பாலகிருஷ்ணா உள்ளிட்ட பல தெலுங்கு பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு அழைப்பாளராக சென்ற நிலையில், என்.டி. ராமாராவின் திருவுருவ சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

seithichurul

Trending

Exit mobile version