சினிமா செய்திகள்

மீண்டும் ‘பேட்ட’ டீம் உடன் இணையும் சூப்பர்ஸ்டார்… ‘தலைவா 169’ அப்டேட்..!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 169-வது திரைப்படத்துக்காக மீண்டும் ‘பேட்ட’ திரைப்படக் குழுவினருடனே இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

‘தலைவா 169’ படத்துக்கு ரஜினிகாந்த் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தொடங்கி உள்ளாராம். முதற்கட்டமாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உடன் பேசப்பட்டு நிறுத்தப்பட்ட ‘ராணா’ திரைப்படத்தைத் தொடங்கலாமா என்பது குறித்த பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாம்.

இரண்டாவதாக சூப்பர் ஸ்டார் ‘பேட்ட’ இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உடன் மீண்டும் இணையலாமா என்பது குறித்தும் பேசி வருகிறாராம். ரஜினிகாந்த் பெரும்பான்மையாக பேட்ட டீம் உடன் தான் இணைவார் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இயக்குநர் சிறுத்தை சிவா உடனான ‘அண்ணாத்த’ படத்தை விரைவில் நிறைவு செய்து விட்ட இடைவெளியை நிரப்ப அடுத்து உடனடியாகவே ‘தலைவா 169’ அப்டேட் வழங்கப்பட வேண்டும் என்பதில் ரஜினி டீம் உறுதி உடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version