சினிமா செய்திகள்

சென்னை திரும்பினார் தலைவர் ரஜினிகாந்த்: வீடியோ வைரல்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அதிகாலை 2 மணிக்கு சென்னைக்கு திரும்பி உள்ளதாக வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் பரிசோதனை செய்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றார். அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தனி விமானத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை அடுத்து அவர் தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் உடல் பரிசோதனையை முடித்து கொண்ட அவர் நேற்று சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது பயணம் ஒருநாள் ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை முடித்து விட்டு தோகா வழியாக கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில் இன்று அதிகாலை 2 மணிக்கு சென்னை வந்தடைந்தார். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே வந்து காரில் ஏறும் காட்சிகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை வந்திருக்கும் ரஜினிகாந்த் ஒரு சில நாட்கள் ஓய்வு எடுத்து விட்டு ’அண்ணாத்த’ படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபடுவர் என்றும் அதன்பிறகு அவர் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்றும் அவரது தரப்பினர் கூறி வருகின்றனர். ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version