சினிமா செய்திகள்

’அண்ணாத்த’ படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும், தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ரஜினிகாந்த், குஷ்பு, மீனா நயன்தாரா உள்ளிட்டோர் தங்களது பகுதியின் டப்பிங் பணிகளை முடித்து விட்ட நிலையில் மற்ற நடிகர்களின் டப்பிங் பணிகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக படக்குழுவினர் இருந்து செய்தி கசிந்துள்ளது.

இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு ’அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தது. அது மட்டுமின்றி இன்று மாலை 6 மணிக்கு ’அண்ணாத்த’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சற்று முன்னர் ’அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பட்டு வேஷ்டி பட்டு சட்டை அட்டகாசமான கூலிங்கிளாஸ் கெட்டப்பில் ரஜினிகாந்த் இருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ஒரு திருவிழா நேரத்தில் எடுத்த புகைப்படம் போல் இது உள்ளது என்பதும், அனேகமாக ரஜினியின் அறிமுகப்பாடல் தோற்றமாக இது இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி தினத்தில் வெளியாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது என்பதும் டி இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் ஜோடியாக மீனா, குஷ்பு நடித்திருக்கும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version