சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’: இது ஒன்மேன் ஷோ அல்ல

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் பார்த்து முடித்ததும் இது சூப்பர் ஸ்டாரின் ஒன் மேன் ஷோ அல்ல, சிறுத்தை சிவாவின் டீமுக்கு கிடைத்த வெற்றி என்பது தெரிய வருகிறது.

தமிழ் சினிமாவில் எத்தனையோ அண்ணன் தங்கை பாசம் சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் வந்திருந்தாலும் இந்த படத்தில் கொஞ்சம் பாசம், எமோஷன் மற்றும் ஆக்சன் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு தங்கைக்காக ஒரு அண்ணன் எந்த அளவுக்கும் இறங்குவார் என்றும் எப்படிப்பட்ட டானுடனும் மோதுவார் என்பதும் இந்த படத்தின் கதையின் மூலம் இயக்குனர் சொல்ல வருகிறார்.

Also Read: சூர்யாவின் ‘ஜெய்பீம்’ திரைவிமர்சனம்: இப்படி கூட படம் எடுக்க முடியுமா?

படித்து விட்டு ஊருக்கு வரும் தங்கையை வரவேற்கும் அண்ணன் காளையன், தங்கையை தங்கம் தங்கம் என்று கொஞ்சும் காட்சிகள், ஊர் மக்கள் முன் தங்கையை பெருமையாகப் பேசுவது, சூரி சதீஷ் உடன் நகைச்சுவையாக பேசுவது என படம் முதல் பாதி முழுவதும் படம் கலகலப்பாக செல்கிறது.

அதேபோல் மாமா மாமா என்று ஒரு புறம் குஷ்புவும், அத்தான் அத்தான் என்று ஒருவரும் மீனாவும் ரஜினியை துரத்த அவர்களிடமிருந்து ரஜினி எப்படி தப்பிக்கிறார் என்பதை லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் சூப்பர் ஸ்டார் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் படம் என்றாலே அவர் தாதாக்களுடன் மோதும் காட்சிகள் இருக்கும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. அதேபோல் இந்த படத்தில் அவர் மூன்று தாதாக்களுடன் மோதுகிறார். ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ் மற்றும் அபிமன்யு ஆகிய மூவரும் கொடுக்கும் முக்கோண வடிவிலான அடுக்கடுக்கான பிரச்சினைகளை சூப்பர் ஸ்டார் எப்படி சமாளிக்கிறார் என்பதுவும் அதிரடி சண்டைக் காட்சிகளின் இடைவெளியே பஞ்ச் வசனங்கள் அனல் பறக்க அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் தேர்வு செய்யப்பட்ட லொகேஷன்கள் அனைத்தும் சூப்பர் என்பதை முதலில் சொல்லி ஆக வேண்டும். குறிப்பாக கொல்கத்தாவில் எடுக்கப்பட்ட காட்சிகள் மிக அழகாகவும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடும்ப உறவுகளில் நடக்கும் போராட்டம், தங்கைக்காக ஒரு அண்ணன் எடுக்கும் ரிஸ்க் மற்றும் மாமா அத்தை மகளுடன் மாட்டிக்கொள்ளும் காமெடி, நயன்தாராவுடன் அழகான காதல் என படம் முழுவதும் குடும்ப சென்டிமென்ட் கலந்த காமெடி ஆக்ஷன் என ஒரு கலவையாக இயக்குனர் சிறுத்தை சிவா ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.

ரஜினியின் எதார்த்தமான நடிப்பு, அதிரடி ஆக்ஷன், தேவைக்கும் அதிகமாகவே பஞ்ச் வசனங்கள் ஆகியவை ரஜினி ரசிகர்களுக்கு திருப்தியை அளிக்கும். மற்றபடி அனைத்து தரப்பினர்களையும் இந்த படம் திருப்தி செய்யுமா? என்பது சந்தேகமே.

டி இமானின் பாடல்கள் அனைத்துமே சிறப்பாக உள்ளது என்பதும் எந்த பாடலும் திணிக்க படாமல் கதையோட்டத்தில் இடையே வருவதால் பாடல்களை ரசிக்கும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பாடல்களை படமாக்கிய விதம் அனைத்துமே பிரம்மாண்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீபாவளி விருந்தாக வெளிவந்திருக்கும் இந்த படம் குடும்ப ஆடியன்ஸ்கள் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை/ ஆனால் வீக்கான பழைய மாடல் திரைக்கதை காரணமாக திரை விமர்சகர்கள் இந்த படத்தை கடுமையாக விமர்சனம் செய்யவும் வாய்ப்பு உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version