சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’: அட்டகாசமான கிளிம்ப்ஸ் வீடியோ

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது ஏற்கனவே பார்த்தோம். அது மட்டுமின்றி ஏராளமான திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று ரஜினிகாந்த் பிறந்த நாளை அடுத்து அவர் நடித்து வரும் ’ஜெயிலர்’ படத்தின் அட்டகாசமான கிளிம்ப்ஸ் வீடியோ மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று காலை அறிவித்திருந்தது. இதனை அடுத்து இந்த வீடியோ சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் ரஜினிகாந்த் அட்டகாசமான கெட்டப்பில் கையில் வாளை உருவிய காட்சியுடன் இருப்பதை அடுத்து இந்த வீடியோவை ரஜினி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version