சினிமா செய்திகள்

‘அண்ணாத்த’ டீசர் ரிலீஸ் தேதி, நேரம் அறிவிப்பு: ரஜினி ரசிகர்கள் குஷி

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்பப் பணிகளிலும் இறுதிகட்டத்தில் உள்ளன என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் முதல் கட்டமாக எஸ்பிபி பாடிய பாடல், அதன் பின்னர் ‘சாரக்காற்றே’ என்ற பாடல் ஆகியவை அடுத்தடுத்த வெளியாகி இணையத்தில் வைரலாக என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அந்த அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் டீசர் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க என்ற வாசகங்களுடன் செய்யப்பட்டுள்ள இந்த ட்விட் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஆயுத பூஜை தினத்தன்று டீசர், இதனை அடுத்து ஒரு சில நாட்களில் இந்த படத்தின் டிரைலரும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாக இருக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version