சினிமா செய்திகள்

அண்ணாத்த படத்தின் அட்டகாசமான மோஷன் போஸ்டர்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த மோஷன் போஸ்டர் ரஜினியின் வசனமாக நாடி நரம்பு முறுக்க முறுக்க, ரத்தம் மொத்தமும் கொதிக்க கொதிக்க, அரங்கு முழுக்க தெறிக்க தெறிக்க, தொடங்குது ஓங்கார கூக்கு என்பது இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி ரஜினி ஆவேசமாக நடந்து வரும் காட்சியும் இந்த மோஷன் போஸ்டரில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘அண்ணாத்த’ படம் முழுக்க முழுக்க குடும்ப சென்டிமென்ட் கதை என்று கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டரில் காணப்படும் ஆக்ஷன் காட்சிகளை பார்க்கும் போது ரஜினி ரசிகர்களுக்கு சென்டிமென்ட் கலந்த ஆக்ஷன் படமாக இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் செய்வது உறுதி என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version