சினிமா செய்திகள்
சூப்பர் ஸ்லிம்மான சிம்பு; லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரிலீஸ்!
சிம்பு மீண்டும் தமிழ் சினிமாவில் பிசியானாலும், அவருடைய ஓவர் வெயிட் அவருக்கு பெரிய பிரச்னையை உண்டு பண்ணியது. வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்த சிம்புவை பலரும் கலாய்த்தனர்.
முன்பு போல சிம்புவால் நடனம் ஆடமுடியவில்லை என்றும் யோகிபாபுவுக்கும் சிம்புவுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றும் விமர்சித்தனர்.
இந்த விமர்சனங்களை எல்லாம் தற்போது சிம்பு முறியடித்துள்ளார். தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ள சிம்பு, தனது தம்பி குறளரசன் நிக்காவுக்கு வருகை தந்த போது, அவருடைய ஸ்லிம் ஸ்டில்கள் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகின்றன.
வெங்கட் பிரபுவின் மாநாடு மற்றும் கெளதம் கார்த்திக் நடிக்கும் ஒரு படத்திலும் சிம்பு நடிக்க உள்ளார்.