சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்லிம்மான ரகுல் ப்ரீத் சிங்!

Published

on

தமிழ், தெலுங்கு, இந்தி என படு பிசியாக நடித்து வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். சூர்யாவின் என்.ஜி.கே உள்ளிட்ட தமிழ் படங்களில் அதிக உடல் எடையில் நடித்து வந்த நடிகை ரகுல் ப்ரீத்சிங், பாலிவுட்டில் அஜய் தேவ்கனுடன் நடித்த டி டி பியார் டி படத்திற்காக 10 கிலோ எடையை குறைத்து நடித்துள்ளாராம்.

அதே உடற்கட்டுடன் தமிழில் சிவகார்த்திகேயன் படத்திலும் நடித்து வருகிறாராம் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு மொழி படங்களில் கொழு கொழு நடிகையாக இருந்த ரகுல் ப்ரீத் சிங், பாலிவுட் சென்றதும், அங்குள்ளவர்களின் ரசனைக்கு ஏற்ப ஜீரோ சைஸ்க்கு தன்னை மாற்றியுள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங்

இதற்காக கடின உடற்பயிற்சி மற்றும் டயட் இருந்துள்ளார். இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்து வரும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version