தமிழ்நாடு

ஒரே ஒரு டூத்பேஸ்ட் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.45 லட்சம் கண்டுபிடிப்பு!

Published

on

சென்னையில் உள்ள பல்பொருள் அங்காடியில் 45 லட்ச ரூபாய் மோசடி செய்த ஒரு நபரை ஒரே ஒரு டூத் பேஸ்ட் மூலம் கடையின் உரிமையாளர் கண்டுபிடித்துள்ளார்

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் ராஜேஷ் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தார். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் போலி பில் மூலம் சிறுகச்சிறுக ரூபாய் 45 லட்சம் வரை மோசடி செய்ததாக தெரிய வருகிறது

இந்த நிலையில் வாடிக்கையாளர் ஒருவர் தான் வாங்கிய பொருளில் டூத் பேஸ்ட் ஒன்றை மாற்றுவதற்காக அங்கு வந்தார். அப்போது அவரது பில்லை வாங்கி சோதனை செய்தபோது அவரது பில்லில் 5000 ரூபாய் எனவும் பல்பொருள் அங்காடியில் உள்ள கம்ப்யூட்டரில் 2500 மட்டும் இருந்ததை பார்த்து உரிமையாளர் சுரேஷ் அதிர்ச்சி அடைந்தார்

இதனை அடுத்து விசாரணை செய்தபோது பல்பொருள் அங்காடியில் வேலை பார்த்த ராஜேஷ் இதேபோல் தினமும் போலி பில் மூலம் ஆயிரக் கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் விசாரணை செய்தபோது மொத்தம் 45 லட்ச ரூபாய் மோசடி செய்ததாகவும் மோசடி செய்த மொத்த பணத்தையும் திருப்பிக் கொடுத்து உள்ளதாகவும் கூறினார்

இந்த நிலையில் திடீரென ராஜேஷ் தலைமறைவானதை அடுத்து சுரேஷ் போலீசில் புகார் செய்ததாகவும் போலீசார் அவரை கோவையில் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் மோசடி செய்த 45 லட்சம் ரூபாய் பணத்தின் மூலம் சொந்த ஊரில் வீடு கார் என சுகமாக வாழ்ந்து வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஒரே ஒரு டூத் பேஸ்ட்டை வாடிக்கையாளர் ஒருவர் மாற்றுவதன் மூலம் இந்த மோசடி தெரியவந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version