வேலைவாய்ப்பு

சூப்பர் சான்ஸ்! 20,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் – உடனே விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

Published

on

20,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள்: உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழகத்தில் இராமநாதபுரம் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இதில் 20,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு, உங்களுக்கான வேலைவாய்ப்புகளை பெறலாம்.

தமிழக இளைஞர்களுக்கு பெரும் வாய்ப்பு:

தமிழக அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க, தனியார் துறையுடன் இணைந்து பல வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், இந்த முகாம்கள் மூலம் முக்கியமான முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

இராமநாதபுரத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம்:

முகாம் (28-09-2024) சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இராமநாதபுரம் முஹம்மது சதக்ஹமித் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும்.

சிறப்பு அம்சங்கள்:

  • 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
  • 10,000க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்கள் உள்ளன.
  • இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு மற்றும் ஆள்சேர்ப்பு நடைபெறும்.
  • அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் பதிவு மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்படும்.
  • வயது 18 முதல் 40 வரை.

திருப்பூரில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம்:

இதேபோல் திருப்பூரில் 28-09-2024 சனிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி மற்றும் காங்கேயம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் காமர்ஸ் வளாகத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

சிறப்பு அம்சங்கள்:

  • 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
  • 10,000க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்கள்.
  • கல்வித்தகுதி: எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு வரை அனைவரும் கலந்து கொள்ளலாம்.

அனுமதி:

இது ஒரு இலவச வேலைவாய்ப்பு முகாம். எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது.

இளைஞர்கள் அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள், ஆதார் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் உடன் கலந்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு www.tnprivatejobs.tn.gov.in எனும் இணையதளத்தில் பதிவு செய்து அறிந்துகொள்ளலாம்.

Poovizhi

Trending

Exit mobile version