ஆரோக்கியம்

அருமையான பிரட் முட்டை உப்புமா!

Published

on

 பிரட் முட்டை உப்புமா:

bread egg upma

தேவையானவை:

பிரெட் – 4துண்டுகள்
முட்டை – 3
பெ.வெங்காயம் – 1 (நறுக்கவும்)
மிளகுத் தூள், சீரகம் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
கடுகு, உளுந்தம் பருப்பு – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2(நறுக்கவும்)
பெருங்காயத்தூள் – சிறிதளவு
கறிவேப்பிலை,
கொத்தமல்லி தழை – சிறிதளவு
எண்ணெய் – தேவைக்கு

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், மிளகாய், பெருங்காயத்தூள், கருவேப்பிலை போன்றவற்றைப் போட்டுத் தாளிக்கவும். பின்னர் வெங்காயத்தைக் கொட்டி பொன்னிறமாக வதக்கவும். நன்கு வதங்கியதும் முட்டையை உடைத்த ஊற்றிக் கிளறவும்.

அதனுடன் மிளகுத்தூள், உப்பு தூவவும். முட்டை உதிரியாக வந்ததும் பிரெட்டு துண்டுகளை சிறிதாக நறுக்கிப் போட்டுக் கிளறவும். உப்புமா பதத்துக்கு வந்ததும் கொத்த மல்லி தழையைத் தூவி இறக்கிப் பரிமாறலாம்.

seithichurul

Trending

Exit mobile version