ஜோதிடம்

சனியை நோக்கும் சூரியன் – அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் யாவர்?

Published

on

செப்டம்பர் 16ஆம் தேதி சூரியன் சிம்மம் ராசியை விட்டு கன்னியில் நுழைகிறார். கன்னியில் இருக்கும் சூரியனின் பார்வை, சனியை நோக்கி செல்கிறது. இது மிதுனம், கடகம், மீனம் போன்ற சில ராசிக்காரர்களுக்கு மிகப் பெரிய அதிர்ஷ்டத்தைத் தர உள்ளது. கிரகங்களின் இந்த நிலை மாற்றம் பலரின் வாழ்க்கையை பொலிவூட்டும் என்று சொல்லப்படுகிறது.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியனின் பார்வை நன்மை தரும். இந்த நேரத்தில் நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வருமானம் அதிகரிக்கும். தொழில் அல்லது வேலைவாய்ப்பில் வெற்றியை அடைவீர்கள். புதிய வாகனம் அல்லது சொத்து வாங்குவதற்கான சிறந்த காலம் இது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.

கடகம்: கடகம் ராசிக்காரர்களுக்கு இப்போதைய காலகட்டத்தில் தொழிலில் அல்லது அலுவலகத்தில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் ஏற்படும். கடன் இருந்தால் அதை திருப்பிச் செலுத்துவது சாத்தியமாகும். தங்கள் கடின உழைப்பிற்கான பாராட்டுக்களைப் பெறுவார்கள். பணவரவு வளர்ச்சியைக் காண்பீர்கள்.

மீனம்: மீனம் ராசிக்காரர்களுக்கு சூரியனின் பார்வையால் எதிர்பாராத நிதி நன்மைகள் ஏற்படும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் சிறந்த வளர்ச்சியை அடைவார்கள். முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கூட இருக்கலாம்.

 

Poovizhi

Trending

Exit mobile version