சினிமா செய்திகள்

விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்!

Published

on

விஷாலின் அயோக்யா படத்தில் குத்தாட்டம் ஒன்றில் நடிக்க சன்னி லியோனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

வடிவுடையான் இயக்கத்தில் உருவாகி வரும் தமிழ் படமான வீரமாதேவி படத்தில் சன்னி லியோன் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் நடிக்கக் கூடாது என்றும் வீரமாதேவி படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்றும் கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்நிலையில், விஷால் நடிக்கும் அயோக்யா படத்தில் ஒரு குத்து பாடலுக்கு நடனமாட சன்னி லியோனுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், நடனமாட சன்னி லியோன் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வெங்கட் மோகன் இயக்கும் இப்படத்தில் ராஷி கன்னா விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். டெம்பர் எனும் தெலுங்கு படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது.

முன்னதாக ஜெய்யின் வடகறி படத்தில் ஒரு ஹாட் சாங்குக்கு சன்னி லியோன் நடனமாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version