சினிமா செய்திகள்
மம்முட்டிக்கு ஜோடியாகும் சன்னி லியோன்!
ஆபாச பட நடிகையில் இருந்து பாலிவுட் நாயகியாக அப்டேட் ஆன நடிகை சன்னி லியோன், தற்போது தென்னிந்திய திரையுலகத்தின் மீது தனது பார்வையை பதித்துள்ளார்.
வி.சி. குகன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வீரமாதேவி படம் உருவாகி வரும் நிலையில், மலையாளத்தில் ரங்கீலா என்ற படத்தில் அறிமுகமாகிறார்.
மேலும், ரங்கீலா படத்தை தொடர்ந்து மம்முட்டியின் மதுர ராஜா படத்தில் நாயகியாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மம்முட்டியின் போக்கிரி ராஜா படத்தின் இரண்டாம் பாகமாக மதுர ராஜா படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.