வணிகம்

சுந்தர் பிச்சையின் புதிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published

on

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த சுந்தர் பிச்சை, தற்போது கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக பொறுப்பை ஏற்றுள்ளார்.

ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக பொறுப்பை ஏற்றுள்ள சுந்தர் பிச்சையின் சம்பளத்தில் மாற்றம் அடைந்துள்ளது.

புதிய பதவி உயர்வை அடுத்து சுந்த பிச்சைக்கு 1,707 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளும், 2020-ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 14 கோடி ரூபாய் சம்பளமும் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவரது செயல்திறனுக்காக 640 கோடி ரூபாய் மதிப்பிலான போனஸ் பங்குகளும் அளிக்கப்பட உள்ளன. கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக அவர் இருந்த போது சுந்தர் பிச்சைக்கும் 13.3 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version