சினிமா

விஷ்ணு விஷால் நடித்த “ராட்ச்சன்“ படத்தைச் சன் டிவி நிறுவனம் கைப்பற்றியது!

Published

on

’முண்டாசுப்பட்டி’ வெற்றிப்படத்தைத் தொடர்ந்து தனது அடுத்தப் படத்தை வித்தியாசமான க்ரைம் த்ரில்லராக இயக்கியுள்ளார் இயக்குநர் ராம்குமார். இதில் அவரது முதல் பட நாயகன் விஷ்ணு தான் ஹீரோவாக நடித்துள்ளார்.

இயக்குநர் ராம் இயக்கத்தில் போலீஸ் கதாப்பாத்திரத்தில் விஷ்ணு விஷால், ராமதாஸ், அமலா பால் ஆகியோர் நடித்து வரும் ராட்சசன் படம். இந்தப்படத்தில் முண்டாசுப்பட்டி குரூப்பான காளி வெங்கட், முனீஸ்காந்த் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்தப்படத்தின் வில்லன் கதாபாத்திரமும் இதுவரை தமிழ்சினிமா பார்க்காத ஒன்றாக அமையும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதோடு, ராட்சசனைப் பார்த்த பிரமாண்ட இயக்குநர் சங்கர், சூப்பர் ஸ்டார் ரஜினி, எம்.எஸ் தோனி படத்தின் இயக்குநர் உள்ளிட்ட பல பிரபலங்கள் அவர்களின் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

விஷ்ணு விஷால் இயக்கி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ராட்சசன் படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளைச் சன் டிவி நிறுவனம் வாங்கியிருக்கிறதாம்.

 

Trending

Exit mobile version