சினிமா செய்திகள்

விஜய் ரசிகர்களுக்கு ‘பீஸ்ட்’ புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த சன் பிக்சர்ஸ்!

Published

on

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் நாளை புத்தாண்டை முன்னிட்டு இன்று நள்ளிரவு ‘பீஸ்ட்’ படத்தின் அப்டேட் வரலாம் என்று ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ‘பீஸ்ட்’ படத்தின் அட்டகாசமான ஸ்டில்லை வெளியிட்டு உள்ளது.

இதில் தாடியுடன் இருக்கும் விஜய் முகத்தில் ஆங்காங்கே காயம்பட்டது போன்றும் அவர் ஆக்ரோஷமான பார்வை பார்ப்பது போன்ற காட்சி உள்ளது. அட்டகாசமாக இருக்கும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த போஸ்டரில் ‘பீஸ்ட்’ படம் ஏப்ரல் 2022ஆம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழ் புத்தாண்டுக்கு இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் 2022ஆம் ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version