சினிமா செய்திகள்

சர்கார் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கியது ஏன்? அறிக்கை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

Published

on

சர்கார் திரைப்படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று ஆளும் அதிமுகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இரண்டு நாட்களாகப் போராட்டம் நடத்தில் வந்த நிலையில் அந்தக் காட்சிகளை நீக்கியதாகச் சன் பிக்சர்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிக்கை:

“சர்கார் திரைப்படத்தில் வாரும் சில காட்சிகளுக்கு அதிராக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பல திரையரங்குகள் முன் வன்முறை செயல்களில் ஈடுபட்டு, அதனால் திரையரங்க உடைமைகளுக்குச் சேதம் விளைவித்தனர். அதனைத் தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் வேண்டுகோளை ஏற்றுத் திரையரங்குகளுக்கும், திரைப்படம் காண வரும் போது மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது பாதுகாக்கும் ஒரே நோக்கோடு சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் ஓரிரு காட்சிகள் நீக்கப்பட்டன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். – சர்கார் படக்குழுவினர்”

எனச் சன் பிக்சர்ஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதன் மூலம் சர்கார் திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியது அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version