சினிமா

சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய்சேதுபதிக்கு தனி விமானம் கொடுத்தது!

Published

on

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் பேட்ட. பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்தது.

இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்படத்தில் இவர்களுடன் த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக் மற்றும் பலர் இப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 9ம் தேதி சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுக் கோலாகலமாக நடைற்றழ, படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்களும் கலந்து கொண்ட இவ்விழாவில் விஜய் சேதுபதி மட்டும் தாமதமாக வந்திருந்தார். இதனால் விழாவில் அவருக்குக் கரகோஷங்கள் வானைப் பிளந்தன.

இந்நிலையில் இந்தத் தாமதத்திற்குக் காரணம், விஜய் சேதுபதி வேறொரு படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாராம். இதனால் வர முடியாத சூழ்நிலைக்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவருக்கெனத் தனியாக ஹெலிகாப்டரை அனுப்பி வைத்துள்ளது சன்பிக்சர்ஸ் நிறுவனம்.

மேலும் விழா முடிந்ததும் அந்த ஹெலிகாப்டரின் மூலமே பாதியில் விட்ட படப்பிடிப்பிற்குச் சென்றுள்ளார்.

 

Trending

Exit mobile version