தமிழ்நாடு

சன்பிளவர், பாமாயில் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.50 உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Published

on

ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் காரணமாக கடந்த சில நாட்களாக சன்பிளவர் மற்றும் பாமாயில் எண்ணெய் கடுமையாக உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது

இந்தியாவில் 20 சதவீதம் சன் பிளவர் ஆயில் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது அங்கு போர் நீடித்து வருவதால் இறக்குமதி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது

இதன் காரணமாக இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் சன் பிளவர் ஆயில், பாமாயில், கடலை எண்ணெய் ஆகியவை கடும் உயர்வு அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய என்னை மார்க்கெட் விருதுநகர் எண்ணெய் மார்க்கெட் நிலவரம் இதோ

கடந்த வாரம் நல்லெண்ணெய் கிலோ ரூ 230-க்கு விற்ற நிலையில் தற்போது ரூ 50 உயர்ந்து ரூ 280க்கு விற்கப்படுகிறது.

கடந்த வாரம் கடலை எண்ணெய் கிலோ ரூ 150 விற்ற நிலையில் தற்போது ரூ 20 உயர்ந்து ரூ170க்கு விற்பனையாகிறது.

கடந்த வாரம் பாமாயில்  ரூ125 க்கு விற்றது தற்போது ரூ 50 விலை உயர்ந்து ரூ175க்கு விற்கப்படுகிறது.

கடந்த வாரம் சன் பிளவர் ரூ 135 விற்கப்பட்டது தற்போது ரூ 50 உயர்ந்து ரூ 185க்கு விற்கப்படுகிறது.

போர் முடிவுக்கு வராவிட்டால் இன்னும் அனைத்து எண்ணெய் விலையும் இன்னும் உயரும் என்று கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

 

Trending

Exit mobile version