தமிழ்நாடு

சி விஜயபாஸ்கரை அடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன்: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published

on

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று காலை முதல் சோதனை நடைபெற்றது என்பதும் லஞ்ச ஒழிப்புத் துறையின் நூற்றுக்கணக்கான அதிகாரி நடத்திய இந்த சோதனை இரவு வரை நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் கிலோ கணக்கில் தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் ஒரு பக்கம் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்து முடிந்துள்ள நிலையில் ஏற்கனவே சோதனை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அக்டோபர் 25-ஆம் தேதி சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் ஏற்கனவே எம்ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடத்தி சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தற்போது சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version