தமிழ்நாடு

நாளை முதல் கோடை விடுமுறைத் தொடக்கம்: மகிழ்ச்சியில் மாணவர்கள்!

Published

on

தமிழ்நாட்டில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மாணவ மாணவிகளுக்கு பொதுத் தேர்வுகள் முடிந்து விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கி இருக்கின்றன. வருகின்ற மே 8 ஆம் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கிறது. 10 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு அந்தந்த பள்ளிகளில் நடக்கிறது.

கோடை விடுமுறை

பள்ளிக் கல்வித் துறையின் கல்வியாண்டு நாட்காட்டியில் குறிப்பிட்டு இருந்தபடி, ஆண்டு இறுதித் தேர்வுகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளை பொறுத்த வரையில், பெரும்பாலான பள்ளிகளுக்கு இறுதித் தேர்வு நடத்தப்பட்டு, ஏற்கனவே கோடை விடுமுறையும் விடப்பட்டு விட்டன. இந்நிலையில் கல்வித் துறை நாட்காட்டியின் படி, வெள்ளிக்கிழமையான இன்று பள்ளிகளுக்கு இறுதி வேலைநாள் ஆகும்.

கடைசி வேலைநாள்

அவ்வகையில் பெரும்பாலான பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு, இன்று ஆண்டு இறுதித் தேர்வின் கடைசித் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வை எழுதி முடிக்கும் மாணவ மாணவிகளுக்கு, நாளை (சனிக்கிழமை) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. கோடை விடுமுறை முடிந்து வழக்கம் போல, ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட உள்ளன. இருப்பினும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், பள்ளிகள் திறப்பு தள்ளிப் போவது குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்து வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version